தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. மிஸ் சென்னை போட்டியில் பட்டம் வென்ற இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி பிரசாந்த், சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் காமெடி ரோலில் திரிஷா தோன்றியிருந்தார். இதனையடுத்து மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவுடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பிறகு முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார்.
சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்த திரிஷாவை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இணையதளத்தில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அதன்படி தற்போது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.