அனைத்து போர்க் கப்பல்களிலிருந்தும் சுமார் 290 கிலோமீட்டர் எல்லை வரையிலான வான் இலக்குகளை கூட தாக்கக்கூடிய ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் அனைத்து போர்க் கப்பல்களிலிருந்தும் சுமார் 290 கிலோ மீட்டர் வரையில் இருக்கும் வான் இலக்குகளை கூட குறிவைத்து தாக்கக்கூடிய ஏவுகணையான கஸ்னாவியை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் கூறியதாவது, தங்கள் நாட்டின் ராணுவம் தொழில் அடிப்படையில் முன்னேறி இருப்பதை இந்த ஏவுகணையின் வெற்றி உறுதி செய்துள்ளதாக கூறியுள்ளது. மேலும் இது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் விஞ்ஞானிகளுக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.