Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெற்றி கணக்கை தொடருமா ஆர்சிபி…? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல் …!!!

இன்று நடைபெறும் 16 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- ராஜஸ்தான் ராயல்ஸ் மோதுகின்றன.

இந்த சீசனில் இதுவரை நடந்த போட்டிகளில் ,ஆர்சிபி அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளை வென்று ,ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய 3 போட்டிகளில் ,1 போட்டியில் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான், 2 தோல்வியை சந்தித்துள்ளது .இதனால் ஆர்சிபி அணியின் தொடர் வெற்றி கணக்கை ,ராஜஸ்தான் முறியடிக்குமா  ?  அல்லது  ஆர்சிபி அணி  ,தொடர் வெற்றியை நீடிக்குமா ? என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு காணப்படுகிறது .

இதுவரை சென்னை மைதானத்தில் ஆடிவந்த ஆர்சிபி அணி, இன்றைய போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாட உள்ளது. இதனால்  மும்பை மைதானத்திற்கு ஏற்றவாறு, அணி வீரர்களை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்தப் போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.

Categories

Tech |