Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள்…. ‘தார்’ கார் பரிசு…. மகேந்திரா குழு தலைவரின் அறிவிப்பு….!!

நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக  சிறப்பாக விளையாடிய இந்திய அணியை சேர்ந்த 6 வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு   வெளியிட்டுள்ளார்.

இந்தியா- ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இதில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 2 – 1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்திய  அணியில் பல முன்னணி வீரர்கள் இல்லாத நிலையிலும் கூட  இளம் வீரர்களின் திறமையான விளையாட்டால் ஆஸ்திரேலிய அணி வீழ்ந்துள்ளது. இதனை நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய கிரிக்கெட் வீரர்களுக்கு குடும்பத்தினரும், உறவினர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு கொடுத்து வரவேற்றுள்ளனர். இந்நிலையில் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய நடராஜன்,ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, முகம்மது சிராஜ்,சுப்மன் கில், வாசிங்டன் சுந்தர் ஆகிய இளம் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக மகேந்திரா நிறுவனத்தின் சார்பில்  “தார் ” கார் பரிசாக வழங்கப்படும் என்று மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Categories

Tech |