சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் ஆய்வை முடித்துக்கொண்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பி உள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த Space X என்ற தனியார் நிறுவனம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்திற்காக என்டோவர் என்றும் பெயரில் ட்ராகன் விண்கலத்தை தயாரித்தது. புளோரிடாவில் உள்ள கெனடி ஏவுதளத்திலிருந்து ராக்கெட் மூலம் டிரக்ஹேர்லி, பாக்என்கேன் இருவரும் கடந்த மே 31-ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இரண்டு மாதங்களுக்கு மேல் தங்கி ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டனர். ஆய்வை முடித்துக் கொண்டு அவர்கள் இருவரும் கடந்த சனிக்கிழமை ட்ராகன் மூலம் பூமிக்கு புறப்பட்டனர். சுமார் 21 மணி நேரம் பயணத்திற்குப் பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை மெக்சிகோ வளைகுடா கடல் பகுதியில் வெற்றிகரமாக இறங்கினர்.
மணிக்கு 17 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக்கூடிய 15 அடி உயரம் கொண்ட என்டோவர் விண்கலத்தின் வேகம் வளிமண்டலத்தை வந்தடைந்ததும் 350 மைல் ஆக குறைக்கப்பட்டது. பின்னர் 15 மைல் வேகத்திற்கு குறைத்து நிலை நிறுத்தப்பட்டது. விண்வெளி வீரர்கள் படகு மூலம் அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்கள் தங்கள் குடும்பத்தினரை சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். 45 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக ஃப்ளாஷ்டவுன் என்று கூறப்படும் விண்குயின்கலம் தண்ணீரில் இறங்குவதை நாசா வெற்றிகரமாக நிகழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.