வெற்றிமாறன் அடுத்ததாக சிம்புவை வைத்து படம் இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் நடிப்பதற்கு பல முன்னணி நடிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இயக்குனர் வெற்றிமாறன் தற்போது காமெடி நடிகர் சூரியின் விடுதலை எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிம்புவை வைத்து படம் எடுக்க விரும்புகிறார். இது தனது ஆசை என்றும் அவர் பல நிகழ்ச்சிகளில் கூறியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான வடசென்னை படத்திலும் சிம்பு,தனுஷ் ஆகிய இருவரையும் இணைத்து நடிக்க வைக்க அவர் திட்டமிட்டுள்ளார் . ஆனால் அதன் பிறகு கதைக்கு தேவையான நிறைய கதாபாத்திரங்கள் உள்ளே வந்ததால் சிம்புவின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாமல் போயுள்ளது. எனவே சிம்பு வடசென்னை படத்தில் இருந்து விலகிவிட்டார்.
அதன்பிறகு இருவரும் தனித்தனியே அவர்களது அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி இருந்து வந்தனர். இந்நிலையில் வெற்றி மாறன் தன் கைவசம் இருக்கும் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சிம்புவை வைத்து படம் எடுக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே இவர்களது கூட்டணியை காண ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்.