வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளர் பிணம் கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடந்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கசவநல்லாத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடம்பத்தூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று பூட்டியிருந்த வீட்டை உடைத்து அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த நபரின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் ஆந்திர மாநிலத்தில் உள்ள புத்தூர் பகுதியில் வசிக்கும் லோகேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.