வேட்பாளர்களின் குற்றப் பின்னணி விவரங்களை மூன்று முறை அந்தந்தக் கட்சிகள் விளம்பரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி விவரங்களை அந்தந்த கட்சிகள் நாளிதழ் மற்றும் ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்றும் வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கு முன்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்று முறை விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக வேட்பாளர்களின் குற்றப்பின்னணி அந்தந்த அரசியல் கட்சிகள் தங்களது இணையங்களில் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.