இந்தியாவில் பரவிவரும் வெட்டுக்கிளியால் பிரியாணி குறித்த குறித்து நெட்டிசன்கள் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்…
உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவை கட்டுப்படுத்த முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் அடங்குவதற்குள் வெட்டுக்கிளியின் படையெடுப்பு இந்தியாவிற்கு பெரும் சவாலாக உள்ளது. விவசாய நிலங்களை கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் அழிக்கும் செய்திகள் நாளுக்கு நாள் வந்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற பகுதிகளில் இயங்கிவரும் தனியார் உணவகங்களில் லோகஸ்ட் பிரியாணி, லோகஸ்ட் 65,லோகஸ்ட் மசாலா என வெட்டுக்கிளிகளை விதவிதமாக சமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை பார்த்த நெட்டிசன்கள் வடிவேலுவின் நகைச்சுவை காட்சியுடன் இதன் புகைப்படங்களை இணைத்து பலவகைகளில் கேலியும் ,கிண்டலும் செய்து வருகின்றனர்.