Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. வீடுகளை சூழ்ந்த தண்ணீர்…. சிரமப்பட்ட பொதுமக்கள்….!!

கனமழையினால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையினால் பல்வேறு இடங்களில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி ஏற்காட்டில் பெய்த மழையினால் மலைப்பாதையில் உள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்து விழுந்தது. மேலும் ஏரி மற்றும் அணைகள் நிரம்பிய வழிந்ததால் சில பகுதிகளில் ஊருக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சேலம் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், பெரமனூர், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, குகை, 5 ரோடு, சங்கர்நகர், கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, செவ்வாய்ப்பேட்டை, சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 3-வது நாளாக தொடர்ந்து காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனையடுத்து அன்னதானப்பட்டி, ரத்தினசாமிபுரம், தாதகாப்பட்டி அம்பேத்கர் நகர், பச்சப்பட்டி பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்ததால் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன்பின் சேலம் தமிழ்சங்கம் சாலையில் போதுமான சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவு நீருடன் சேர்ந்து மழை நீர் சாலைகளில் வெள்ளம் போல் காட்சியளித்தது. இததேபோன்று சங்கர் நகர் பகுதியில் அரசு மாணவிகள் விடுதிக்கு செல்லும் சாலையில் மழைநீர் அதிகளவு காணப்பட்டது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் சாலைகளில் நடந்து செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர். மேலும் கன மழையினால் அணைமேடு பகுதியில் உள்ள திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோன்று சேலம் ரத்தினசாமிபுரம் பகுதியில் கன மழையினால் வீடுகள் மற்றும் அங்குள்ள கடைகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Categories

Tech |