வெவ்வேறு விபத்துகளில் 2 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் முகமது ஷாலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது இத்ரீஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோரூமில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முகம்மது இத்ரீஸ் மோட்டார் சைக்கிளில் மேலப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது குறிச்சி வாய்க்கால் பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முகமது இத்ரீசின் மோட்டார் சைக்கிள் தனது கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள தடுப்பு சுவரில் எதிர்பாராதவிதமாக மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் முகமது இத்ரீஸ் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் முகமது இத்ரீசை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முகமது இத்ரீஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதே போன்று பாளையங்கோட்டை பகுதியில் அந்தோணி முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளி ஆவார். இந்நிலையில் அந்தோணி முத்து கீழநத்தம் நான்குவழிச்சாலை விளக்கு பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் அந்தோணி முத்தின் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அந்தோணி முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் அந்தோணியின் சடலத்தை கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் இரண்டு விபத்துகள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.