இத்தாலியிலுள்ள பல பகுதிகளுக்கு வெப்ப அலை காரணமாக சிவப்பு எச்சரிக்கையை அந்நாட்டின் சுகாதாரத் துறை விடுத்துள்ளது.
சிசிலி, கோலபிரையா ஆகிய தீவுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 48.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக அங்கு 300க்கும் அதிகமான தீயணைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதனையடுத்து ஆப்பிரிக்க நாட்டிலிருந்து ஆன்ட்டிசைக்ளோன் இத்தாலிக்கு நகர்ந்து செல்வதால் அங்கு அதிகப்படியான வெப்ப அலை உருவாக்குகிறது. இந்நிலையில் இத்தாலிய சுகாதாரத்துறை நாட்டின் பல பகுதிகளுக்கு வெப்ப அலை காரணமாக சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து இத்தாலியில் வெப்ப நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள்.