தமிழ் சினிமாவில் பழநி திரைப்படத்தின் வாயிலாக காஜல் அகர்வால் திரைனயுலகிற்கு அறிமுகமானார். எனினும் முதல் திரைப்படம் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இதையடுத்து 2009 ஆம் வருடம் தெலுங்கில் வெளியாகிய மகதீரா படம் அவருக்கு மிகுந்த வெற்றியை பெற்றுக் கொடுத்தது. மேலும் தமிழ் சினிமாவில் விஜய் உடன் இணைந்து துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் ஆகிய 3 படங்களிலும் நடித்து ஹாட்ரிக் அடித்துள்ளார்.
காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் வருடம் கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது இந்தியன்-2 படம் காஜல் அகர்வால் கைவசம் இருக்கிறது. இந்நிலையில் காஜல் அகர்வால் பிரசவத்திற்குப் பிறகு உடல் எடை கூடி இருக்கும் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.