Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தருவதாக ஆன்லைன் மோசடி…!!

தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் டெல்லியை சேர்ந்த ஆரிப் கான், வஷித் கான், சந்தீப் குமார் அவர். சென்னை வேளச்சேரியை சேர்ந்த சிவசங்கர் என்பவர் www.timeforjob.com என்ற இணையதளத்தில் மூலம் வேலைக்காக விண்ணப்பித்துள்ளார். வேலைவாய்ப்பு நிறுவனத்தில் மூவாயிரம் ரூபாய் கட்டி பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். சிவசங்கர் பணம் செலுத்திய பின்னரும் வேலை பற்றிய எந்தவித தகவலும் வரவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஆன்லைன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை சிவசங்கர் தொடர்பு கொண்டபோது எட்டாயிரம் ரூபாய் கட்டினால் ஒரு வாரத்தில் வேலை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று சிறிது சிறிதாக  ஒரு லட்சத்தி 45 ஆயிரம் ரூபாய்வரை சிவசங்கர் இடமிருந்து அந்த மோசடி கும்பல் பெற்றுள்ளது. புகாரின் பெயரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுபோன்ற மோசடியான ஆன்லைன் வேலைவாய்ப்பு நிறுவனங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Categories

Tech |