Categories
தேசிய செய்திகள்

வேளாண் மசோதா: ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம்..!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த அரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் விளை பொருட்கள் வர்த்தக மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள்  மசோதா ஆகிய மசோதாக்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் வகையிலும் இந்த சட்டங்கள் இருப்பதாக விவசாயிகள், அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. மத்திய அரசின் இந்த சட்டங்களை கண்டித்து அரியானா மாநிலம் அம்பாலாவில் இளைஞர் காங்கிரசை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து விவசாயிகளை விரட்டியடித்தனர். போராட்டக்காரர்கள் போலீசார் தடுப்பை மீறி செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  வேளாண் சட்டங்களை கண்டித்த அரியானா மாநிலம் சிறுசார் பகுதியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான விவசாயிகள் சாலையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Categories

Tech |