Categories
தேசிய செய்திகள்

வேளாண் மசோதா நகலை கிழித்தெறிந்த திரிணாமூல் எம்.பி.

வேளாண் மசோதாக்களுக்கு  எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

விவசாயிகளின் விளை பொருட்கள் வர்த்தக மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள் நாடாளுமன்ற மக்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டன. இவை விவசாயிகளுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வேளான் மசோதாக்களை மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோவர் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாக்கள் விவசாயிகள் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வரும் என்றும் நாட்டில் யாருக்கு வேண்டுமானாலும் தங்களுடைய விளைபொருட்களை விவசாயிகள் சுதந்திரமாக விற்பனை செய்ய முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதனிடையே வேளாண் மசோதாக்களுக்கு  எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. திரு டயரி கொக்கரை மசோதாவின் நகலை கிழித்தெறிந்தார். அவை தலைவர் இருக்கையில் இருந்த மைக் உடைக்கப்பட்டதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |