Categories
தேசிய செய்திகள்

வேளாண் மசோதாவிற்கு எதிராக ரயில் மறியல் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்..!!

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில விவசாயிகள் மூன்று நாட்கள் ரயில் மறியல் போராட்டத்தை இன்று தொடங்கினார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாய தொழிலாளர்கள் சார்பில் நடைபெறும் இந்த மறியல் போராட்டம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இதனால்  ரேஸ்பூர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் 14 இணை சிறப்பு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேதத்தைத் தவிர்க்கும் நோக்கத்தில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |