விபச்சாரம் நடத்தியதாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள் புரம் காவல்துறையினருக்கு மகிழ்ச்சி நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெருமாள்புரம் காவல்துறையினர் அங்கு விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் பசுமதி மற்றும் பெருமாள்புரம் என்.எச். காலனி பகுதியில் வசிக்கும் முருகன் ஆகிய 2 பேரும் சேர்ந்து வாடகைக்கு வீடு எடுத்து பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் முருகன் மற்றும் பசுமதி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.