விபத்தில் கணவனை இழந்த பெண் தனது கணவர் குறித்து தனது சோகத்தைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி Jevgenijs Kirilliovs என்ற 39 வயதுடைய நபர் ஒருவர் Northans-ன் Daventry அருகே A45 சாலையில், Jaguar X-Type காரில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக சாலையின் தவறான பக்கத்தில் Wierzbicki என்ற நபர் ஓட்டி வந்த லாரி ஒன்று அந்த கார் மீது பயங்கரமாக மோதியது. அதில் Jevgenijs Kirilliovs சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமணமான இரண்டு வாரத்திலேயே அவர் உயிரிழந்த சம்பவம் குடும்ப உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஓட்டுனர் ஆபத்தான வகையில் வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஓட்டுநருக்கு 2 ஆண்டு மற்றும் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இதுபற்றி உயிரிழந்த நபரின் மனைவி Giedre கூறும்போது, நான் என் கணவரை இழந்து விட்டேன் என்பது மட்டுமல்லாமல் என் ஆத்ம துணையையும் என்னுடைய சிறந்த நண்பனையும், எங்கள் இரு குழந்தைகளின் தந்தையும் இறந்து விட்டேன் என வேதனையுடன் தெரிவித்துள்ளார். அதே சமயத்தில், அவர் ஒரு சிறந்த மனிதர். நாங்கள் மூன்று பேரும் எப்போதும் அவரது அன்பை சந்தேகிக்கவில்லை.
அவர் எப்போதும் எங்கள் குடும்பத்தினருடன் அவரது நேரத்தை செலவிடுவார்.நாங்கள் தான் எப்போதும் அவருடைய முன்னுரிமையாக இருந்து வந்தோம். எங்கள் குழந்தைகளுக்காக நாங்கள் எங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். அவர் இறந்த பின்னர், நகரத்தின் பின்னால் இருக்கின்றோம். இந்தத் தனிமை மற்றும் இத்தகைய சோகம் இரண்டும் மிகவும் கொடுமையானது என மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்.