அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 17 பேர் பலத்த காயமடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அப்ப தாங்கல் கூட்ரோடு அருகில் ஆரணியில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்துகள் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து எதிரில் சென்னை எழும்பூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இரண்டு பேருந்துகளும் எதிர்பாராதவிதமாக ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டது. இதனால் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் அம்பிகா, சிவசங்கரி, விஜயா, லட்சுமி உள்ளிட்ட 5 பெண்களும், பாரதிராஜா, கோபிகிருஷ்ணன், முரளிதரன், ராஜா உள்ளிட்ட 7 ஆண்களும் பலத்த காயமடைந்தனர்.
மேலும் சிறுவர்கள், அரசு பேருந்து டிரைவர் ராஜேந்திரன், பாஸ்கர் மற்றும் கண்டெக்டர் ஆனந்தன், ரஞ்சித் உள்ளிட்ட 17 பேர் பலத்த காயமடைந்தனர். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் இவர்களை மீட்டு அரசு மருத்துவமனிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.