Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்து-ஆட்டோ…. 2 பேர் காயம்…. போலீஸ் விசாரணை….!!

பேருந்து-ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று கீழ்பென்னாத்தூர் வழியாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கீழ்பென்னாத்தூர்-திண்டிவனம் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தும் எதிரே கீழ்பென்னாத்தூரை நோக்கி வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.

மேலும் ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் ஜேம்ஸ், ஆட்டோவில் பயணம் செய்த அருமைசெல்வம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் இருவரையும் உடனடியாக மீட்டு திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த கீழ்பென்னாத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |