Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. துடிதுடித்து இறந்த 2 பேர்…. திருவண்ணாமலையில் கோரவிபத்து….!!

பார்சல் லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வி.புரம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பெருமாள் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள  வேட்டவலத்தில் விழுப்புரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற வீரன் என்பவர் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். அப்போது பெருமாளின் உறவினரான கர்ணன் என்பவரின் மனைவி கலா என்பவர் தன்னுடன் வீட்டிற்கு வந்து வீட்டில் உள்ள உறவினர்களைப் பார்த்து விட்டு செல்லுமாறு அழைத்துள்ளார். இதனால் பெருமாளும், கலாவும் மண்டபத்திலிருந்து நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற பார்சல் சர்வீஸ் லாரி ஒன்று அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் கலா மற்றும் பெருமாள் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் 2 பேரையும் உடனடியாக மீட்டு வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக அவர்களை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பெருமாளை பரிசோதிதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன்பின் மருத்துவமனையில் கலா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கலா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |