மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் வசிக்கும் சண்முகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்தினருடன் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாத்தான்குளம் பன்னம்பாறை வளைவில் சென்று கொண்டிருந்தபோது நாசரேத் பகுதியில் வசிக்கும் பால்ராஜ், வெங்கடேஷ், சிவபாலா ஆகியோர் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் மற்றும் காரில் இருந்த 1 பெண்ணும் பலத்த காயமடைந்தனர். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் 4 பேரையும் உடனடியாக மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் பாராட்டினர்.