மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தி.மு.க. பிரமுகர் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் தி.மு.க. பிரமுகரான அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேல்முருகன் செம்மேடு கிராமத்திலிருந்து ஏரிப்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏரிப்பாளையம் காலனி அருகில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த புதுப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேல்முருகனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டிப்பர் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.