நாய் குறுக்கே சென்றதால் நிலைதடுமாறி கீழே விழுந்து கியாஸ் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழப்பூங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர். இவர் மேலூர் அருகே உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார் . சுதாகர் கடந்த 1 ஆம் தேதி வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நாய்த்தான்பட்டி என்ற இடத்தில் சென்றபோது நாய் ஒன்று சாலையின் குறுக்கே பாய்ந்தது .
இதனால் நிலைதடுமாறி சுதாகர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இருப்பினும் சிகிச்சை பலனின்றி சுதாகர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.