இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெட்டூர்ணிமடம் பகுதியில் வில்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் முடித்துவிட்டு கட்டிட தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வில்சன் மோட்டார் சைக்கிளை கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனமும் வில்சன் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வில்சனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே வில்சன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த தென்தாமரைகுளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வில்சனின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வில்சன் மீது மோதிய நபர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.