விபத்தில் காயமடைந்த முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான அண்ணாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணாதுரை வெள்ளகோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கிக் கவிழ்ந்தது. இதில் கீழே விழுந்த அண்ணாதுரை பலத்த காயமடைந்தார்.
இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அண்ணாதுரையை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அண்ணாதுரை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.