விபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தபூமங்கலம் குளத்துக்கரை தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும் 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் ரமேஷ் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சமையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். மேலும் ரமேஷ் திருமண வீடுகளுக்கு சென்றும் சமையல் வேலை செய்து வந்தார். இந்நிலையில் ஆத்தூர் பகுதியில் உள்ள ஒரு திருமண வீட்டில் கடந்த 1-ஆம் தேதி ரமேஷ் சமையல் வேலையை முடித்துவிட்டு வீரபாகு திருமண மண்டபம் அருகில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது நிலைதடுமாறிய ரமேஷ் மோட்டார்சைக்கிளை எதிரே நின்று கொண்டிருந்த ஒரு லோடு ஆட்டோ மீது மோதினார். இதனால் படுகாயமடைந்த ரமேஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் ரமேஷ் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.