சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள மேட்டுபிரான்சேரி பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெருமாள் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெல்லை மகாராஜபுரம் மின்வாரிய அலுவலகத்தில் போர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கயத்தாறிலிருந்து மேட்டுபிரான்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது ராஜாபுதுக்குடி சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் வைத்துள்ள தடுப்பு சுவரில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்தகாயமடைந்த பெருமாளை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.