மொபட் மீது மினி லாரி மோதிய விபத்தில் நாடக கலைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பகுதியில் நாடகக் கலைஞரான ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தண்டராம்பட்டு பகுதியில் இருந்து வாழவச்சனூருக்கு மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது உண்ணாமலை பாளையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது வாழவச்சனூரிலிருந்து தண்டராம்பட்டு நோக்கி சென்ற மினிலாரி ரமேஷ் ஒட்டி வந்த மொபட் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வானாபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.