அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாங்கால் கிராமத்தில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இருவருக்கு சாந்தி என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 4 வருடங்களாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மாங்கால் சாலையில் சாந்தி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்து திடீரென சாந்தி மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்தகாயமடைந்த சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து தூசி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாந்தியின் உடலை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசொதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.