Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. துடிதுடித்து இறந்த பிளஸ்-2 மாணவர்…. கன்னியாகுமரியில் கோர விபத்து….!!

அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடலாக்குடி பறக்கை ரோடு பகுதியில் முகமது ரகீம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹிஷாம் அகமது என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹிஷாம் அகமது செட்டிகுளம் பகுதியில் உள்ள டியூஷனுக்கு காலையில் சென்று வருவார். அதேபோல் வழக்கமாக ஹிஷான் முகமது காலையில் டியூசனுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் டியூஷன் முடிந்த பிறகு ஹிஷாம் அகமது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஹிஷாம் அகமது அவரது நண்பரான கோட்டார் சிதம்பர நகர் பகுதியில் வசிக்கும் ஆகாஷிடம் டியூசன் முடிந்ததும் தன்னையும் மோட்டார் சைக்கிளில் வீட்டில் கொண்டு போய் விட கேட்டுள்ளார்.

இதனையடுத்து ஆகாஷின் மோட்டார் சைக்கிளை ஹிஷாம் அகமது ஓட்டிச் சென்றுள்ளார். அவருக்கு பின்னால் ஆகாஷ் அமர்ந்துள்ளார். இந்நிலையில் பீச் ரோடு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் மீது மோதியது. இதனையடுத்து அதே வேகத்தில் மோட்டார் சைக்கிளை திருப்பிய போது அங்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீதும் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ஹிஷாம் அகமது மற்றும் ஆகாஷ் ஆகிய இருவரையும் அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஹிஷாம் அகமது பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின் ஆகாஷை மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவரது ஹிஷாம் அகமதுவின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விபத்தில் சம்பந்தப்பட்ட பேருந்தை தேடி வருகின்றனர்.

Categories

Tech |