Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கிய நபர்…. துரிதமாக செயல்பட்ட போலீஸ்…. குவியும் பாராட்டுகள்….!!

விபத்தில் சிக்கியவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் செரியலூர் இனாம் கிராமத்தில் தனது தாயாருடன் தங்கி இருந்து ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் முருகானந்தம் கீரமங்கலம் கடைவீதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது முருகானந்தம் பட்டுக்கோட்டை சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி எதிரே வந்த சரக்கு வேன் மோதி பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் முருகானந்தத்தை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ்க்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கீரமங்கலம் காவல்துறையினர் ஆம்புலன்ஸ் வருவதற்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளதால் இரத்தம் அதிகமாக வெளியேறும் என்பதால் முருகானந்தத்தை உடனடியாக ஒரு சரக்கு வண்டியில் ஏற்றி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து முருகானந்தத்தை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  சேர்த்துள்ளனர். இந்நிலையில் தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு விபத்தில் காயம் அடைந்தவரை வாகனத்தில் ஏற்றிச் சென்ற காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |