பிரிட்டனில் ஸ்மார்ட் மோட்டார்ஸ் பாதையில் நின்றுகொண்டிருந்த காரின் மீது லாரி மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் சிறுவனின் தாய் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
பிரிட்டனில் கடந்த 2018 ஆம் ஆண்டு தேவ் என்ற சிறுவன் தனது தாத்தாவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது சகோதரனை பார்க்க காரில் சென்றுள்ளான். பின்னர் வீட்டிற்கு திரும்பிய போது காரை சிறுவனின் தாத்தா ஸ்மார்ட் மோட்டார் என்ற பபாதையில் நிறுத்தியிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி காரின் மீது பலமாக மோதியது. இதில் சிறுவன் தேவ் பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்நிலையில் சென்றவாரம், ஸ்மார்ட் மோட்டார்ஸ் பாதையில் உயிரிழந்தவர்களின் புள்ளி விவரம் வெளியிடப்பட்டது. அதில், 2017-ல் ஸ்மார்ட் மோட்டார்ஸ் பாதையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் 2019-ல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து சிறுவன் தேவ்-ன் தாயார் மீரா கூறும்போது, தேவ் அவனது அண்ணன் நீல் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தான். ஸ்மார்ட் மோட்டார்ஸ் என்பது மிகவும் ஆபத்தான பகுதி என்பதை பொதுமக்கள் கண்டிப்பாக உணர வேண்டும்.
இதுவரை நான் வாழ்நாளில் அனுபவித்து கொண்டிருக்கும் வலியை எந்த ஒரு தாயும் இனிமேல் அனுபவிக்க கூடாது. மேலும் ஸ்மார்ட் மோட்டார்ஸ் குறித்து வாகன ஓட்டிகளுக்கு முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.