கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருவேங்கடபுரம் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்திரகுப்தன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாலாட்டின்புதூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சித்திரகுப்தன் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு சாலையோரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று சித்திரகுப்தனின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சித்திரகுப்தன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சித்ரகுப்தனின் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த நாலாட்டின்புத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.