Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பின்னோக்கி வந்த லாரியால்… மோட்டார் சைக்கிளில் சென்ற… வாலிபருக்கு நேர்ந்த துயரம்…!!

பொன்னேரி அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேர்ந்தமங்கலம் அருகே உள்ள பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் சாமிராஜ். இவருடைய மகன் கார்த்தி(33). இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு நாமக்கல் அருகே உள்ள பகுதியில்  கார்த்திக் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்குள்ள நூற்பாலைக்கு லோடு ஏற்றி வந்த  லாரியை அதன் ஓட்டுநர் ஜெயவேல் பின்னோக்கி இயக்க முற்பட்டார்.

பின்புறமாக வந்த லாரி கார்த்தி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த கார்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே  பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |