மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தம்மாள் காலனி பகுதியில் துரைராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நரேந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஸ்பிக்நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நரேந்திரன் வேலைக்கு செல்வதற்காக தூத்துக்குடியிலிருந்து ஸ்பிக்நகருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று நரேந்திரனின் மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முயன்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த நரேந்திரனை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நரேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.