விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செ.நாச்சிபட்டு கிராமத்தில் பிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செ.நாட்சிபட்டு கிராமத்தில் இருந்து செங்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பிரசாத் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். இந்நிலையில் எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி பிரசாத் தூக்கி வீசப்பட்டு லாரியில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரசாத்தின் உடலை கைப்பற்றி செங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் விபத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டியும் பிரசாத்தின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கூறி பிரசாத்தின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு அங்கிருந்து களைந்து சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.