Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லோடு ஆட்டோ…. கோர விபத்தில் பறிபோன விவசாயி உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லோடு ஆட்டோ மோதியதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொளத்துபாளையம் பகுதியில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பெரியசாமி தன் வீட்டு வேலைக்காக லோடு ஆட்டோவில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பகவதிபாளையம் பிரிவு அருகில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோவை நிறுத்தி விட்டு அங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென லோடு ஆட்டோ நகர்ந்து பெரியசாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காங்கேயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரியசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லோடு ஆட்டோ டிரைவரான விழுப்புரம் பகுதியில் வசிக்கும் துரைசாமியை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |