Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பனி மூட்டத்தால்… 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 8 பேர்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருக்கு சொந்தமான டாட்டா சுமோ பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை நோக்கி இன்று அதிகாலை 4 மணி அளவில் எட்டு பேருடன் வந்து கொண்டிருந்தது. அப்போது பனிமூட்டம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த டாட்டா சுமோ 250 அடி பள்ளத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் பயணம் செய்த அனைவரும் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்த 8 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |