Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையில்… மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்… ஆட்டோ ஓட்டுநருக்கு நேர்ந்த கொடுமை…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் லோகிதாஸ்(47). இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.  அதே பகுதியில் கட்டுமான தொழில் செய்து வந்தவர் செல்வம் (50).  உறவினர்களான லோகிதாஸும்  செல்வமும் நேற்று மோட்டார் சைக்கிளில்  ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.  சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது சென்னை நோக்கி சென்ற கார் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற லோகிதாஸும் செல்வமும் தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் படுகாயமடைந்த லோகிதாஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.  படுகாயமடைந்த செல்வம்  உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . பின்னர்  அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு செல்வத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லோகிதாஸின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல்  சென்ற கார் ஓட்டுநரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |