Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தந்தையுடன் வேலைக்கு சென்ற பெண்… சாலையை கடக்கும் போது… ஏற்பட்ட சோகம்….!!

விபத்தில் இளம்பெண் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாபுலால். இவரது மகள்  21  வயதுடைய துர்காதேவி. துர்காதேவி மதுரையில் உள்ள  கடையில்  பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல்  அவர்  தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பணிக்கு புறப்பட்டார் . அப்போது  மதுரை கீழவெளி பகுதியில் சாலையை ஒரு புறத்திலிருந்து மறுபுறமாக கடக்க  பாபுலால் முயன்றுள்ளார். அச்சமயத்தில் அதிவேகமாக வந்த மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த துர்காதேவி தலையின் மேல் லாரியின் சக்கரம் ஏறியது . இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துர்காதேவியின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து  குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரிடம் விசாரித்து  வருகின்றனர்.

Categories

Tech |