Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த லாரி … திடீரென கேட்ட சத்தம்… லாரி ஓட்டுனருக்கு நேர்ந்த கொடூரம்..!!

நின்று கொண்டிருந்த லாரி மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மகன்கள் திருநாவுக்கரசு(42) மற்றும் சுப்புராஜ்(37). இவர்கள் இருவரும் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தனர். நேற்று மாலையில் தூத்துக்குடியிலிருந்து மரதடிகளை  லாரியில் ஏற்றி கொண்டு  சென்று கொண்டிருந்தனர். லாரியை திருநாவுக்கரசு ஓட்டியுள்ளார். அவர் தூக்கம் வருவதாக கூறியதால்  சுப்புராஜ்  லாரியை ஓட்ட ஆரம்பித்துள்ளார். அதிகாலையில் சீதபற்பநல்லூர் அருகே சென்றபோது லாரியின் அடிப்பகுதியில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது.

இதனால் லாரியை நிறுத்திவிட்டு லாரிக்கு அடியில் சென்று சுப்புராஜ் பார்த்துக் கொண்டிருந்தார் . அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று சுப்புராஜ்  ஓட்டி வந்த லாரியின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் நின்று கொண்டிருந்த லாரி  முன்புறமாக நகர்ந்த போது லாரியின் அடியில் பழுது பார்த்துக் கொண்டிருந்த சுப்புராஜ் மீது லாரியின் சக்கரம் ஏறியது. இந்த விபத்தில்  லாரியில் தூங்கிக்கொண்டிருந்த திருநாவுக்கரசு சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த சுந்தரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.இன்று  அதிகாலை 3 மணிக்கு நடந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த  சுப்புராஜின் உடலை இன்று காலை 7 மணிக்கு பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கும் பணியில் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும்  காவல் துறையினரும் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சுப்புராஜின் உடல் மீட்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |