Categories
கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட செய்திகள்

பழுதாகி நின்ற லாரி மீது மோதிய கார்… ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு… திருப்பூர் அருகே பரபரப்பு….!!

லாரி  மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உள்ள வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி. இவர் தனது குடும்பத்தினருடன் தஞ்சாவூருக்கு  காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காங்கேயம் சாலையில் லாரி ஒன்று பழுதாகி நின்றது. லேசான மழை பெய்து கொண்டிருந்ததால் அதிகாலை நேரத்தில் அவ்வழியே  காரை ஓட்டி வந்த மயில்சாமி லாரியின் பின் பகுதியில் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளார். இதில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது.

இந்த விபத்தில் மயில்சாமி அவரது மனைவி இந்து மற்றும் இந்துவின் தாயார் கௌசல்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த கலைவாணி ,கௌதம் , ரம்யா ஆகிய 3 பேருக்கும்  அங்குள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக  அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |