சாலையில் நடந்து சென்ற முதியவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொக்கர செல்லியூர் பகுதியை சேர்ந்தவர் வீரன்.இவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று வீரன் வள்ளிபுரம் – பாலப்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் வீரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் நாமக்கல் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் காவல்துறையினர் வீரன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தின் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த வாகன ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.