Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்… மரத்தில் மோதியதால்… நேர்ந்த துயர சம்பவம்….!!

மரம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மலைப் பகுதியை சேர்ந்தவர்கள் நாகலிங்கம்(17), சிவா(17), மஞ்சுநாத்(17). நண்பர்களான மூவரும் சம்பவத்தன்று  மோட்டார் சைக்கிளில் கொளத்தூருக்கு வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது காரைக்காடு அருகே சென்றபோது சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளிலிருந்து  கீழே விழுந்து 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே  நாகலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். சிவா மற்றும் மஞ்சுநாத் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |