Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்… புதுமாப்பிள்ளைக்கு நடந்த சோகம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

வேனும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அனுசுயாதேவி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணம் நடந்து இரண்டு மாதமே ஆனது. இந்நிலையில் முருகராஜ் மோட்டார் சைக்கிளில் மணலூரிலிருந்து சங்கரன்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து புளியம்பட்டியிலிருந்து வேனில் சில பேர் ஒப்பனையாள்புரம் துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளும், வேனும் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் முருகராஜ் படுகாயமடைந்தார். இதனால் உயிருக்கு போராடி கொண்டிருந்த முருகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவலறிந்த சங்கரன்கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |