Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீங்க அங்க போகாமலே இருந்திருக்கலாம்… சொந்த ஊரில் தவிக்கும் குடும்பத்தினர்… மாவட்ட ஆட்சியரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

சவுதி அரேபியாவில் நடந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பகுடி பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்து வந்துள்ளார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவியும், மதுமித்ரா, ஜெய்ஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில்  தனியார் பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்த ராஜேஷ் கடந்த  2019 – ஆம் வருடம் சவுதி அரேபியாவிற்கு தனது வீட்டின் வறுமை காரணமாக சென்றுள்ளார். இதனையடுத்து அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில்  ராஜேஷ் டிரைவராக பணிபுரிந்துள்ளார். அதன்பின் சவுதி அரேபியாவில் நடந்த விபத்து ஒன்றில் ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது நண்பர்கள் ராஜேஷின் மனைவியிடம்  அவரது இறப்பு குறித்து அலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்த உமாமகேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் உமாமகேஸ்வரி தனது கணவர் ராஜேஷ் இறந்ததற்கான முழுவிவரத்தை வெளியுறவுதுறை மூலம் பெறவும், உயிரிழந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஒரு வழிவகை செய்யும்படி உமாமகேஸ்வரி கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |