நடந்து சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சையன் . இவருக்கு 26 வயதில் துர்கா என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று துர்கா வலங்கைமான் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குப்பசமுத்திரம் பகுதியை சேர்ந்த துரை என்பவரது மகன் சிந்துராஜன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் துர்கா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு துர்கா படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் துர்காவிற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் துர்கா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் லேசான காயங்களுடன் சிந்துராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.