Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற தம்பதி… திடீரென்று மோதிய லாரி… கணவன் கண்ணெதிரே மனைவிக்கு நேர்ந்த கொடுமை…!!

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் கண்ணெதிரே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கேத்தம்பட்டியை சேர்ந்த தம்பதியினர் மோகன் – அஞ்சலை. மோகன் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை அவர் தனது மனைவி அஞ்சலையுடன் வேடசந்தூருக்கு சென்று விட்டு  மொபட்டில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார் . ஒட்டன்சத்திரம் சாலை அருகே பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் அவர்கள் மாற்று வழியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேடசந்தூரிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு  விறகு ஏற்றிச் சென்ற லாரி தம்பதியர்  சென்ற மொபட்டின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் மொபட்டிலிருந்து கீழே விழுந்த அஞ்சலையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோகன் லேசான காயத்துடன் உயிர் பிழைத்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது மனைவி இறந்ததைக் கண்ட மோகன் மனைவியின் உடலை தனது  மடியில் வைத்து கதறி அழுத காட்சி அனைவரது  நெஞ்சையும் உலுக்கியது .

Categories

Tech |